தமன்னாவின் அதிரடி முடிவு

0
155

தமன்னாவின் அதிரடி

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை, வீரம், தர்மதுரை என்று அவர் நடித்த ஹிட் படங்களின் பட்டியல் நீள்கிறது. பாகுபலியில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்றார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய குயின் படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’கில் தற்போது நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றார் தமன்னா.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நான் சினிமாவில் இவ்வளவு காலம் நீடிப்பது அதிர்ஷ்டம். இதுவரை கிடைத்த அனுபவங்களை இனிமேல் நடிக்கப்போகிற படங்களில் காட்டப்போகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் ஒன்றிரண்டு தவறுகள் செய்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். புதுசா வந்துள்ளார். போகப்போக கற்றுக்கொள்வார் என்று நினைப்பார்கள்.