தபால் ஊழியர்கள் போராட்டம் : 4 இலட்சம் கடிதங்கள் தேக்கத்தில்

0
31

தபால் ஊழியர்கள் கடந்த 26ஆம் திகதி நள்ளிரவுமுதல் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியானப் போராட்டத்தால் 4 இலட்சத்திற்கும் அதிகமான தபால்கள் தேக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், எங்களது கோரிக்கைக்கு அரசு உறுதியான தீர்வொன்றை முன்வைக்கும்வரை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வோம் என்று தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

நுவரெலியா, காலி, கண்டி உள்ளிட்ட இடங்களில் புராதன தபால் நிலையங்கள் அகற்றப்பட்டு ஹோட்டல்கள் அமைப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும்.

தற்போது தனியார் கட்டமொன்றில் கூலிக்கு நடத்திச் செல்லப்படும் பிரதான தபால் நிலையம் அதில் இருந்து அகற்றப்பட்டு கொழும்பு ஜனாதிபதி மாவத்தை அமைந்து பிரதான தபால் காரியாலய கட்டத்தில் அமைத்தல்.
2006 ஆம் ஆண்டு 6.6 இலக்க சுற்று நிருபத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக தபால் சேவைக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதில் திருத்தம் மேற்கொள்ளல்.

உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்நிறுத்தி கடந்த 26ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டம் காரணமாக 4 இலட்சத்திற்கு அதிகமான தபால்கள் தேக்கமடைந்துள்ளன. பல்கலைகழகத்திற்கு முதலாம் ஆண்டுக்காக இணைத்துக்கொள்ளும் திகதியும் இந்தப் போராட்டத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments