தனியார் வைத்திய சாலைகளை நிர்வகிக்க விரைவில் விசேட சட்ட நடைமுறை

0
23

தனியார் வைத்திய சாலைகளை நிர்வகிக்க விரைவில் விசேட சட்ட நடைமுறைகளை அரசு செயற்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தனியார்
ராஜித சேனாரட்ன

தனியார் வைத்தியசாலைகளை நிர்வகிக்கும் பொருட்டு பிரித்தானிய நிறுவனமொன்று இலங்கையில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்து விற்பனை நிலைகளை பரிசோதித்தது அறிக்கையொன்று கடந்த வாரம் கையளிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையை அரசு பரிசீலித்துள்ள நிலையில் விரைவில் தனியார் வைத்தியசாலைகளை நிர்வகிக்கும் வேலைத்திட்டமொன்று வகுக்கப்படவுள்ளது.

இதற்காக சுகாதாரப் பணிப்பாளரின் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஒருவர் மற்றும் சுகாதார அமைச்சின் சட்டப் பணிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments