தடையற தாக்கும் சூறாவளிகள் – அடுத்து ஜோஸ்

0
54

அமெரிக்காவுக்கு தென்கிழக்கில்,   சுமார் 640 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் புயல் தான் இந்த ஜோஸ், இது நான்காம் கட்ட ( Category 4) வீரியத்துடன் தரையை தாக்கவிருக்கிறது . தற்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல். அதன் நகர்வு அமெரிக்காவின் வடகிழக்குக் கரையோரத்தை நோக்கியே அமைந்திருக்கிறது. இதே வேகமும், நகர்வும் தொடர்ந்தால், அடுத்த ஓரிரு நாட்களுக்குள் ஜோஸ் சூறாவளி அமெரிக்காவைத் சூறையாட வாய்ப்பு இருக்கிறது” என அந்நாட்டின் தேசிய சூறாவளி நிலையம் அறிவித்துள்ளது.jose hurricane

மேலும், ஜோஸ் தரை தட்டினால், நியூ ஜேர்ஸி, லோங் ஐலண்ட், கனெக்ட்டிக்கட், மசாசூசெட்ஸ் மற்றும் ரோட் ஐலண்ட் ஆகிய பகுதிகளை சம்ஹாரம் செய்யக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எவ்வாறினெனினும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், நியூயோர்க் உட்பட அமெரிக்காவின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசவும், தொடர்மழை பொழியவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement