டெங்கு தொடர்பில் ஜனாதிபதியுடன் மருத்துவர் சங்கம் நேரடியாக கலந்துரையாட ஆர்வம்

0
32

டெங்குநோய் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடுவதற்கு இலங்கை அரச மருத்துவர்கள் சங்கம் தீர்மானித்திருக்கிறது.

டெங்கு தொடர்பில்

இதற்கான தினமொன்றை ஒதுக்கித்தருமாறு அச்சங்கத்தின் தலைவரான டாக்டர் அநுருத்த பாதெனியவும் செயலாளரான டாக்டர் ஹரித அளுத்கேயும் கையொப்பமிட்ட கடிதமொன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப் பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

நாட்டின் சகல பகுதிகளிலும் உக்கிரமடைந்துள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு தங்கள் சங்கத்துக்கும் உள்ளது எனவும் இந்தப் பணிக்கான சகல உதவி ஒத்தாசைகளையும் வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக டாக்டர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு தொடர்பில்

தற்போதைய நிலையை மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் ஆராய்தல், டெங்கு ஒழிப்பு தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், கிராமிய மட்டங்களில் டெங்கு ஒழிப்புக் குழுக்களை ஸ்தாபித்தல், டெங்கு ஒழிப்புப் பணிகளுக்கு தனியார் துறையில் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளல் போன்றவை உட்பட பல்வேறு ஆலோசனைகள் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments