ஞானசார தேரர் தலைமறைவா?

0
336

ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை அடுத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஞானசார தேரர்

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்துதல், இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் வெறுப்புப் பேச்சுக்களை பேசுதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் இவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு புதுகடை நீதிமன்றம் ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைபாடுகள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்ட குற்றப் பிரிவுக்கு அழைத்திருந்த போதிலும் அவர் ஆஜராகவில்லை. இதன் காரணமாகவே அவரை கைதுசெய்வதற்கான பிடி பிரந்தை பொலிஸார் பெற்றுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com