ஞானசார தேரரை கைதுசெய்ய பொலிஸார் வலைவீச்சு

0
459

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கான நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவரை கைதுசெய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்கடை நீதிமன்றத்தில் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே புதுக்கடை நீதிமன்றத்தின் 4 ஆம் இலக்க நீதிபதியினால் ஞானசார தேரருக்கு வௌிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இ​டையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றியமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக ஞானசார தேரரை கைதுசெய்வதற்காக புதுக்கடை நீதிமன்றத்தில் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்றத்தின் 4 ஆம் இலக்க நீதிபதியினால் ஞானசார தேரருக்கு வௌிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டு கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை முன்னெடுக்குமாறு பணித்துள்ளார்.

ஞானசார தேரர் நீதிமன்றில் நேற்றைய தினத் முன்னிலையாகாததனால் வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஞானசார தேரர் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியுள்ளார்.

சுகயீனம் காரணமாகவே தேரர் நேற்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்று மன்றில் தெரிவிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments