ஞானசார தேரரின் நடவடிக்கைகள் எல்லை மீறி விட்டன – அமைச்சர் றிஷாட்

0
765
Rrishad Bathiudeen Interview
Rrishad Bathiudeen Interview
Want create site? Find Free WordPress Themes and plugins.

கேள்வி- பொதுபல சேனா இயக்க செயலாளர் ஞானசாரரை கைது செய்ய வேண்டுமென பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளீர்களே?

பதில்- ஆம். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் எல்லை மீறி விட்டன அல்லாஹ்வை பகிரங்கமாக தகாத வார்த்தைகள் கொண்டு தூற்றி வருகின்றார். இனவாதத்தை மோசமாக கட்டவிழ்த்து விடுகின்றார் இதனாலேயே நானும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியும் கூட்டாக இந்த முறைப்பாட்டை பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி;க்கை விடுத்தோம்.

கேள்வி – பொலிஸ்மா அதிபரை நீங்கள் சந்தித்ததாக பத்திகைகளில் செய்திகள் வெளிவந்தனவே!

பதில் – கடந்த 18ம் திகதி மாலை பொலிஸ் தலைமையகத்தில் அவருக்கெதிராக பதிவு செய்த பின்னர் முறைப்பாட்டுக்கார்ரகளான நாங்கள் அனைவரும் பொலிஸ்மா அதிகரை சந்தித்து ஞானசாரரின் நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கினோம். அவரது வெறுப்பூட்டும் பேச்சுக்கள், அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் நிந்திக்கும் கருத்துக்கள் அடங்கிய ஆவணங்களையும் பொலிஸ்மா அதிபரிடம் கையளித்தோம். சகோதரர்களாக வாழும் முஸ்லிம்;களுக்கிடையே இனக்குரோதத்தை வளர்க்கும் அவரது செயற்பாடுகளை எடுத்துரைத்தோம். பொலிசாருக்கோ சட்டத்துக்கோ அவர் கிஞ்சித்தும் பயமில்லாது மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினோம்.

கடந்த ஆட்சியில் அவரும் அவருடன் அணிசேர்ந்துள்ள இனவாதக்கூட்டமும் மேற்கொண்ட நடவடிக்கையினாலேயே முஸ்லிம்கள் நல்லாட்சியை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார்கள். இந்த ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கை அவர் மதிப்பதாக இல்லை என்பதையும் பொலிஸ்மா அதிபருக்கு உணர்த்தினோம்.

கேள்வி – பொலிஸ்மா அதிபரின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்தது?

பதில் – இது தொடர்பில் ஆராய்ந்து பொலிஸ் திணைக்களம் உரிய நடவடிக்கை மேறகொள்ளுமென அவர் உறுதியளித்தார்.

கேள்வி – ஞானசார தேரரின் நடவடிக்கைகள் தொடர்பில் நீங்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றீர்களே?

பதில் – வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான் அந்தப்பிரதேசத்தில் பௌத்த மத மத குருமார்கள் அனைவரிடமும் நல்லுறவையும் நெருக்கத்தையும் கொண்டிருக்கின்றேன். ஆவர்களும் என்னுடன் மிகவும் அந்நியோன்ய உறவைக் கொண்டுள்ளனர். ஆனால் ஞானசார தேரர் போன்ற இனவாதத்தேரர்கள் பௌத்த மதத்தின் கோட்பாடுகளையும் பௌத்தம் போதிக்கும் பண்புகளையும் மீறி செயற்படுகின்றனர்.

கடந்த அரசாங்கத்திலேயே இவர் முஸ்லிம்கள் மீதான குரோதப்போக்கை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் முஸ்லிம்களையும் அவர்களின் இஸ்லாமிய கலாச்சார விடயங்களையும் கேவலமாக விமர்சித்த தேரர் பின்னர் எங்களது இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை நிந்தித்தார். அத்துடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாது நாங்கள் புனிதமாகக்கருதும் குர்ஆன் தொடர்பில் பிழையான கருத்துக்களைத் தெரிவித்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தினார். இதன் மூலம் முஸ்லிம்களை ஆத்திரமடையச்செய்தார். அத்துடன் தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளாது எம்மைப்படைத்த இறைவனைக் கேவலப்படுத்தினார். இதனாலேயே நாங்கள் அவர் மீது குற்றஞ்சாட்டி இருந்தோம்.

கேள்வி – கடந்த அரசில் ஞானசாரர் மீது எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் இருந்தும் அவர் சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டாரே!

பதில் – ஞானசாரரினதும் அவரைச்சுற்றியுள்ள இனவாதிகளின் நடவடிக்கையுமே கடந்த அரசை தூக்கி எறியச்செய்தது. அந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதில் முஸ்லிம்கள் முழுப்பங்களிப்பையும் செய்தனர் வாக்குகளை மட்டுமல்ல தமது பணங்களையும் வாரி இறைத்தனர்.

முஸ்லிம்கள் மீது ஞானசாரருக்கு ஏன் இவ்வளவு குரோதமென்று எங்களுக்கு தெரியாத போதும் அவரது நடவடிக்கையில் பாரிய பின்புலமொன்று இருப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம.; ஹலால் உணவைத்தடுக்க வேண்டுமெனவும் பர்தா அணியக்கூடாதெனவும் ஆரம்பத்தில் அடம்பிடித்தார்.

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டார். மறிச்சிக்கட்டிக்கு வந்து அகதிகளின் கொட்டில்களை பிடுங்கி எறிந்து அட்டகாசப்படுத்தினார். 2014.04.23ம் திகதி கொள்ளுப்பிட்டியில் எனது அமைச்சுக்குள் அத்துமீறிப்பிரவேசித்து அடாவடித்தனம் புரிந்தார். அமைச்சு அதிகாரிகளை அச்சுறுத்தினார். அளுத்கம, தர்ஹா டவுன், கலவரத்துக்கு சூத்துரதாரி ஞானசாரராக இருந்தும் கடந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தகக்லவரம் தொடர்பில் ஞானசாரர் மீது பல முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்ட போதும் பொலிசார் எந்த நடவடிக்கையும் இற்றை வரை எடுக்கவில்லை கடந்த அரசும் கண்டும் காணாதது போல இருந்தது.

கேள்வி- நல்லாட்சி அரசிலும் ஞானசாரர் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளாரே

பதில் – ஞானசாரரின் முஸ்லிம்கள் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அல்லாஹ்வை அவர் தொடர்ந்தும் அவமதித்து வருவதை நிறுத்துமாறும் கோரி முஸ்லிம் அமைச்சர்களாகிய நாங்களே பொலிஸ் தலைமையகத்துக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஞானசாரருக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இருப்தாகத் தெரியிவில்லை அவருக்கு மட்டும் ஒரு சட்டம். ஏனையோருக்கு வேறு சட்டம் என்ற நிலை தொடர்கின்றது. நீதி மன்ற கட்டளையை மீறி தேரரும் அவரது சகாக்களும் இறக்காமம் மாயக்கல்லி மலைப்பிரதேசத்துக்குச் சென்று அங்கு களேபரத்தில் ஈடுபட்டு அருகில் இருந்த மக்களையும் அச்சுறுத்தியுள்ளார். எனினும் சட்டம் இன்னுமே பார்த்துக்கொண்டு இருக்கின்றது இது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் வாளாவிருந்தால் நிலைமை விபரீதமாகி இனங்களுக்கிடையே பாரிய விரிசல் ஏற்படும் என்பதைத் தெரிவிக்கின்றேன்.

அது மட்டுமன்றி அண்மை;காலமாக முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்குதல்கள் இடம்பெறுகின்றன். போலன்னறுவை, தம்பாலை, சின்னவில் பட்டி ஓணகம, பகுதியில் பொதுபல சேன மற்றும் ராவண பலயா அமைப்பினர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 5 மாட்டுப்பண்ணைகளை தாக்கி சேதப்படுத்தியதுடன் முஸ்லிம்களை வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

தோப்பூர் செல்வநகர் நினாக்கேனி பகுதியில் வாழும் முஸ்லிம்களை தாக்கி வெளியேறுமாறு கூறியுள்ளனர். வெள்லம்பிட்டி கொகிலவத்த பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பாணந்துறை டவுன் பள்ளி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாணந்துறை எலுவில் முஸ்லிம் பகுதியில் குண்டுவீச்சு இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுக்குள் நுழைந்து ஞானசார தேரர் அட்டகாசம் செய்துள்ளார். இவ்வாறு சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இந்தச் செயல்கள் அரசாங்கத்தின் முஸ்லிம்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நன்றி: tishadbathiudeen.lk

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments