ஞானசார ஆஜராகாவிடின் கைது செய்யவும் – நீதிமன்றம்

0
395
Want create site? Find Free WordPress Themes and plugins.

ஹோமாகம நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்த மாதம் 18,  19 மற்றும் 20ஆம் திகதிகளில் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கு விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.டீ தெஹிதெணிய மற்றும் தேவிகா தென்னகோன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், குறித்த வழக்கின் பிரதிவாதியான ஞானசாரர் இன்று நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைதுசெய்வதற்கு அனுமதி கோரப்பட்ட போதும்,    அடுத்த மாதம் குறிப்பிட்ட தினங்களில் இடம்பெறவுள்ள வழக்கு விசாரணைகளுக்கு அவர் ஆஜராகாத பட்சத்தில் அவரை கைதுசெய்யுமாறும்    நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments