தே…ப… கெட்ட வார்த்தை சர்ச்சை: “பேச விரும்பவில்லை” என்றார் ஜோதிகா

0
179

ஜோதிகாவின் திரை வாழ்க்கையும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையும் சரி. அவர் மீது ரசிகர்களுக்கு மிகுந்த மரியாதையை உண்டுபன்னுபவை. ஆனால் அப்படிப்பட்ட ஜோதிகாவே ஆபாச வசனம் பேசியது அவரது ரசிகர்களுக்கேக் கூட கொஞ்சம் அதிர்ச்சிதான்.

பாலா என்றாலே ‘சர்ச்சை’ என்றுதான் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை உறுதி செய்யும் வகையில் அவர் இயக்கி, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘நாச்சியார்’ படத்தின் டீசரை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். அதற்குக் காரணம் டீசரில் ஜோதிகா பேசிய ஆபாச வசனம். இதனால் சமூக ஆர்வலர்களும், மாதர் சங்கங்களும் கொதித்தெழுந்து பாலா, ஜோதிகா இருவரின் மீதும் கண்டனங்களை தெரிவித்ததோடு அல்லாமல் கோர்ட்டில் வழக்கும் தொடுத்தனர்.

ஜோதிகாவின் திரை வாழ்க்கையும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையும் சரி. அவர் மீது ரசிகர்களுக்கு மிகுந்த மரியாதையை உண்டுபன்னுபவை. ஆனால் அப்படிப்பட்ட ஜோதிகாவே ஆபாச வசனம் பேசியது அவரது ரசிகர்களுக்கேக் கூட கொஞ்சம் அதிர்ச்சிதான்.

கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார் ஜோதிகா. அப்போது பத்திரிகையாளர்கள் பலரும் ‘நாச்சியார்’ டீஸர் சர்ச்சை தொடர்பாக கேள்வி எழுப்ப. அதற்கு பதிலளித்த “அந்த டீஸரைப் பற்றி இப்போது பேச வேண்டாம். படம் பார்த்தால் அனைத்துமே முடிவுக்கு வந்துவிடும். அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை” என்றார் ஜோதிகா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement