ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுள்ளார்.

0
38

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கொழும்பு நகர சபைக்கு போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன அறிவித்துள்ளார்.பிரதீப் ஜயவர்தன

கொழும்பில் இன்று (19) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பிரதீப் ஜயவர்தன தற்பொழுது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.பிரதீப் ஜயவர்தன

தனக்கு மொட்டு சின்னத்தில் போட்டியிட, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடமிருந்தும் அழைப்பு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது அழைப்புக்கு ஆராய்ந்து தேடிப் பார்த்த பின்னரே பதில் தருவதாக பஷில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement