ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு வழங்குவதற்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பில் தோல்வி

0
144

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு வழங்குவதற்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 436 பிரேரணைக்கு ஆதரவாகவும் 119 பேர் ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதித் தீர்வையை வழங்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை முன்னாள் அரசின் காலத்தில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதித் தீர்வை விளக்களிக்கப்பட்டதுடன், இலங்கையில் பெரும்மளவான தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மீளக் கிடைக்கும் பட்சத்தில் ஆண்டுதோறும் 2 பில்லியன் வருமானத்தை பெற முடியும் என்று கூறப்பட்டது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்கு தற்போதைய நல்லாட்சி அரசு 2015ஆம் ஆண்டு மீண்டும் பரிந்துரைத்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதற்காக பரிந்துரையை ஐரோப்பிய ஆணைக்குழு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு விடுத்தது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை

இதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு பெரும் ஆதரவு கிடைத்தமையால் பிரேரணைக்கு எதிராக 436 வாக்குகளும் ஆதரவாக 119 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வரிச்சலுகை வழங்கப்படுவது குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com