ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இன்றுமுதல் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கிறது

0
30
Want create site? Find Free WordPress Themes and plugins.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இன்றுமுதல் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாக 6600 பொருட்களுக்கான வரிச்சலுகை இல்லாமல் போனமையால் ஐரோப்பிய சந்தையில் இலங்கை இருப்பு துடைத்தெறியப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசு நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கு பதிலாக பாரிய மனிதவுரிமை மீறல்களை கட்டவிழ்த்து விட்டதால் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான வரிசலுகையை நிறுத்தியது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டதால் சுமார் 2 1/2 பேருக்கு நேரடியாகவும் 10இலட்சம் பேருக்கு மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போனமை மாத்திரமின்றி இலங்கையில் ஆடை உற்பத்தியும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

ஜி.எஸ்.பி. பிளஸ்

மீண்டும் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்குமானால் ஆண்டொன்றுக்கு 2பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வருமானமாக பெர முடியும் என்று நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் அரசு மேற்கொண்டுவரும் நல்லிணக்க முயற்சியின் பிரதிபலனாகவே இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்துள்ளதால் இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைவதுடன், ஆரம்பகட்டமாக 20 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments