ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா

0
28

ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா.

ஜப்பானுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மூன்றாவது உலகப்போருக்கு ஜப்பான் தயாராகுமேயானால் ஜப்பானைத் தவிடுபொடியாக்கி விடுவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் போர்தந்திரங்களை ஜப்பான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் பட்சத்தில் ஜப்பானால் எங்களை வெற்றிகொள்ள முடியாது. வடகொரிய படைகளின் தாக்குதல்களை ஜப்பானால் எதிர்கொள்ள முடியாது எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் போர் வெடித்தால் ஜப்பானால் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது. போருக்காக அங்கு நிலைநிறுத்தப்படும் (குவாம் தீவிலுள்ள அமெரிக்க இராணுவ முகாம் உட்பட) அனைத்தும் தவிடுபொடியாகி விடும் எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது வடகொரியா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments