ஜப்பானுக்கு அதிகமாக முதலீட்டு சந்தர்ப்பங்களை வழங்க தயார் – ஜனாதிபதி

0
13

ஜப்பானுக்கு இன்னும் அதிகமாக முதலீட்டு சந்தர்ப்பங்களை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக ஜனாபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானின் முன்னணி கைத்தொழில், வர்த்தக நிறுவனங்களின் 77 பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1979ஆம் ஆண்டு ஜப்பானின் மிகப் பெரிய வர்த்தகக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட பின்னர், 39 ஆண்டுகள் கழித்து, ஜப்பானில் இருந்து மிகப் பெரிய வர்த்தகப் பிரதிநிதிகள் குழு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கைத்தொழில், உட்கட்டமைப்பு, உருக்கு, மென்பொருள், போக்குவரத்து, விமானசேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஜப்பானிய அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com