காணாமல் போனோரின் உறவுகளை நாளை சந்திப்பாரா ஜனாதிபதி?

0
20

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை நேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளதால் அதில் பங்குகொள்ளும் பொருட்டே ஜனாதிபதி யாழ்ப்பாணம் செல்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண செயலகத்தில் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்தில், மாவட்டத்தில் அபிவிருத்தி மற்றும் மீளாய்வுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன.

இந்த கூட்டத்திற்கு மாகாணத்தின் சகல அரசாங்க அதிபர்களும், அதிகாரிகளும், பங்குகொள்வதுடன், வடமாகாண ஆளுநரையும் ஜனாதிபதி சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிற்பககல் 2 மணியளவில் காணாமல் போனோரின் உறவுகளைசந்திக்வுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments