ஜனாதிபதி பிரதமருக்கு அழைப்பாணை

0
35

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போலி உடன்படிக்கையொன்றை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

என்றாலும், அரச பணிகள் காரணமாக அவர்களால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லையென ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன், இதற்காக வேறு ஒரு திகதியை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கமைய இந்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement