இரண்டு வாரங்களில் அரசியல், பொருளாதார ரீதியில் ஜனாதிபதி முக்கிய தீர்மானங்கள் : இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன்

0
69

அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்மானங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ள உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

 ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நிதி அமைச்சர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,
நாட்டின் பொருளாதார நிலைமையை பார்க்கின்ற போது மகிழ்ச்சியடைய முடியாத நிலைமை உள்ளது. ஏற்மதி வருமானத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது. அரச செலவுகளும் அதிகரித்துள்ளன. அரசின் வருமான அதிகரித்து வருகின்றது அதற்கு நிகராக செலவீனங்களும் அதிகரித்து வருவதால் நெருக்கடியான நிலைமைக்கு நாம் முகம் கொடுக்க நேரிடும். அதற்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்து ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பபட்டுள்ளது.

அரசாங்கத்தினதும், அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல், பொருளாதார ரீதியில் ஜனாதிபதி சில முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் நாட்டை வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்வதன் இதன் நோக்கமாகவே மேற்படி தீர்மானங்களை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

இது அரசியல் ரீதியான தீர்மானமன்றி நாட்டுக்கான தீர்மானமாகும். நாட்டின் பொருளாதாரத்தை சரியான திசையில் முன்னெடுப்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement