ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் 3 மாதத்தால் நீடிப்பு

0
12

மத்திய வங்கியில் பிணைமுறி விநியோகத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மூன்றுமாத காலத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி அப்போதைய மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன எலோசியஸியஸின் மருமகனின் பேப்பச்சுவல் நிறுவனத்திற்கு வினியோகிக்கப்பட்ட பிணைகளில் மோசடி இடம்பெற்றதால் மத்திய வங்கிக்கு 1200மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக மூன்றுமாதகாலப்பகுதியில் விசாரணைகளை முடிவிக்க வேண்டும் என்று ஆணைக்குழுவுக்கு கூறப்பட்டிருந்தது. ஆனால், ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய கடந்த ஜனவரி மாதம் ஆறுமாதம் காலநீடிப்பு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் எதிர்வரும் ஒக்டோம்பர் 27ஆம் திகதிவரை ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மூன்று மாதத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments