ஜனாதிபதியை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்

0
38

இலங்கையின் பொருளாதாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் வலுவடைந்துள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சேன்ங் வான்குவாங் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நீண்டகாலமாக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு சீன அரசாங்கம் வழங்கிவரும் பயிற்சிகளுக்கும், நாட்டில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கும் இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளதுடன், சீனா இலங்கைக்கு வழங்கும் உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் இலங்கையின் சுதந்திரத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி இதன்போது அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com