ஜனாதிபதியின் கூட்டத்தில் சம்பந்தனும் பங்கேற்கவில்லை

0
28

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டிய அவசர கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கவில்லை.

விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக, கட்சித் தலைவர்களின் அவசர கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கூட்டியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டு எதிரணி, மற்றும் ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் தம்மால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று ஜனாதிபதி செயலகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது.

இரா.சம்பந்தன், கடந்த மூன்று நாட்களாக வன்னிப் பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருவதால்,அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com