ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் – மஹிந்த தேசப்பிரிய

0
36

ஜனவரி மாதம் உள்ளுராட்சி ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் எனத் தாம் நம்பிக்கை கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மிகவும் தாமதமடைந்ததன் காரணமாகவே, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து அதிக அக்கறை காட்டப்படுகிறது.

விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதன் பின்னர் அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

நீதியானதும், சுதந்திரமானதுமாக தேர்தலை நடத்தி, மக்கள் கருத்தை உரிய முறையில் வெளிப்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com