ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த இலங்கையின் ஒத்துழைப்பை கோருகின்றது மியன்மார் அரசு

0
21

ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த இலங்கையின் ஒத்துழைப்பை கோருகின்றது மியன்மார் அரசு.

மியன்மாரில் ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவும், ஸ்தீரமானதொரு நாடாளுமன்றத்தை அமைப்பதற்கு இலங்கையின் ஒத்துழைப்பை வழங்குமாறு அந்நாட்டு அரச தலைவரான ஆங்- ஷாங் சூகி பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள ஒரு பாதை ஒரு அணை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை குழுவினருக்கும், மியன்மார் குழுவினருக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, இலங்கையின் சார்பில் வழங்ககூடிய சகல ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும், இலங்கையின் நாடாளுமன்றக்குழுவொன்றை மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும், மியன்மாருக்குமிடையிலான வரலாற்று ரீதியிலான உறவுகளைப் பலப்படுத்துவது சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement