சைட்டம் விவகாரம் தீர்வை முன்மொழிந்தது அரசாங்கம் அவிசாவளை, ஹோமகமையில் பயிற்சியளிக்கவும் முடிவு

0
24

சைட்டம் விவகாரம் தொடர்பிலான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அரசாங்கம் தீர்வை முன்மொழிந்துள்ளது.

இதற்கமைய சட்டமா அதிபரின் அனுமதியுடன் இலங்கை வைத்திய சபையால் முன்வைக்கப்பட்ட இலங்கை வைத்திய கல்வி குறித்த குறைந்த பட்ச தகைமைகள் சுகாதார அமைசால் வர்த்தமானியில் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் விவகாரம்

சையிடம் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்களுக்கான மருத்துவப் பயிற்சிகளை அவிசாவளை மற்றும் ஹோமாகமவில் வழங்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை வைத்திய சபை மற்றும் பல்கலைக்கழக ஆணைக்குழு ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறும் பரிசோதனைகளுக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதனை போதனா வைத்தியசாலையாக நடத்திச் செல்ல தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments