சைட்டம் விவகாரம் : ஜனாதிபதி தலைமையில் வட்டமேசை மாநாடு

0
30

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்தவக் கல்லூரித் தொடர்பில் நாட்டின் சகல தரப்பினருடனும் கலந்துரையாடி இறுதித் தீர்மானமெடுக்க ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில் விரைவில் வட்டமேசை மாநாடொன்று நடைபெறவுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது சைட்டம் தொடர்பிலான விவகாரம் சூடுபடித்துள்ளது. இக்கூட்டத்தில் சைட்டம் குறித்த ஒருகிணைந்த அமைச்சரவை பத்திரம் ஒன்றை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லா ஆகியோரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இப்பத்திரத்தில், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு உரித்தான நெவில் பெர்ணாந்து வைத்தியசாலை அரசுடமையாக்குதல் மற்றும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் முகாமைத்துவத்தை விரிவாக்கல் தொடர்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்நிலையிலேயே சைட்டம் விவகாரம் குறித்து பேராசிரியர்கள், புத்திஜீவிகள் மற்றும் துறைசார் சகல தரப்பினருடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுத்தும் வர்த்தமானியில் அறிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையில் வட்டமேசை மாநாடொன்று விரைவில் நடத்த ஏற்பாடுகள் ஒழுங்குச் செய்யப்படுகிறது.

கடந்த 21ஆம் திகதி அனைத்துப் பல்கலைகழக மாணவர்கள் சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார அமைச்சை முற்றுகையிட முற்பட்ட போது பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகினர். இதனைக் கண்டித்து மறுநாள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்திருந்தது.

விடயம் பூதாகரமாகவே சைட்டம் குறித்து புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி அறிக்கை ஒன்றின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments