சைட்டம் குறித்த அரசின் முடிவை 29 இற்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என்று வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு காலக்கெடு

0
45

சைட்டம் குறித்த அரசின் முடிவை 29 இற்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என்று வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு காலக்கெடு விடுத்துள்ளது.

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மறுத்துவக் கல்லூக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் நாடளாவிய ரீதியிலான மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டமொன்று கடந்த 5ஆம் திகதி 30இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடாதழுவிய ரீதியில் முன்னெடுத்திருந்தது.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர் நலிந்த ஹேரத்,

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியான சைட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 5 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக வேலை நிறுத்தப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர் சங்கத்தினர், புகையிரத ஊழியர்கள், இலங்கை போக்குவரத்து சபை உறுப்பினர் என பல்வேறு அமைப்பினரும் ஆதரவினைத் தெரிவித்தனர்.

மேற்படி வேலைநிறுத்தப் போராட்டமானது தற்காலிக ஒன்றே என்றும் சைட்டம் விவகாரத்தில் அரசு உரிய தீர்வொன்றினை முன்வைக்காவிட்டால் வெகுவிரைவிலேயே பாரிய போடரட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்றார்.

29 ஆம் திகதிக்குப் பின்னரான எந்த தினத்திலும் பாரிய வேலைநிறுத்தப் போராட்டமொன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறலாம். இவ்விவகாரம் குறித்து முடிவெடுக்க அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சைட்டம் குறித்து 29 ஆம் திகதிக்கு முன்னர் உரியத் தீர்வொன்றை முன்வைக்காவிட்டால் நாம் பல்வேறு தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments