சைட்டம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அரசுக்கே உள்ளது

0
45

சைட்டம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அரசுக்கே உள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்று மின்வலு மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

தற்போதைய அரசு தொடர்பில் மக்கள் பூரணை மகிழ்ச்சியடையாவிடினும் கடந்த அரசு தொடர்பில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சைட்டம் தொடர்பிலான விவகாரம் தற்போது நாட்டில் பூதாகரமாகியுள்ளது.
கடந்த அரசின் காலத்திலேயே இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நெவில் பெர்ணாந்து வைத்தியசாலையை அரசுடமையாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சைட்டம் நிர்வாகத்தை விரிவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

சைட்டம் குறித்து

சைட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசிடமே காணப்படுகிறது. மாறாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com