சைட்டத்திற்கு எதிர்ப்பு துண்டுபிரசுர விநியோக போராட்டம்

0
28

இலவச கல்வியையும், இலவச சுகாதாரத்தையும் நாசமாக்கும் சைட்டத்தை ரத்து செய்யக் கோரியும் சைட்டத்தின் பாதிப்புகள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு விளிப்பூட்டும் துண்டுபிரசுரம் விநியோகம் பஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயத்தினரே இன்று (22) மாலை விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகத்தை முன்னெடுத்தனர்.

அதன்போது கருத்துதெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள் மலையக பெருந்தோட்ட பகுதியில் மாணவர்கள் கல்வி பயில ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது.


அதேபோல, நாட்டில் பல லட்சம் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் ஒரு சிலரின் நன்மைக்காக இலவச கல்வியை இல்லாதொழிக்கும் சைட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் முனைப்பு காட்டுகின்றது.

நெவில் பெர்ணாண்டோ தனியார் வைத்தியசாலை அரசுசடமை ஆக்கப்பட்டதாக அரசாங்கம் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறது.

ஆனால், அரச வர்த்தமானியில் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது,

இவ்வாறான மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை தோற்கடித்து பொது மக்களும் மாணவர்களும் ஓரணியில் திரண்டு போராட்டத்தை முன்னெடுக்க வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

பஸ் தரிப்பிடத்திற்கு வருகைத் தந்த மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கும் துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments