சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 5ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டம்

0
46

சைட்டம் தனியார் மருத்துவமனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 5ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு அரசின் பிரதான ஐந்து தொழிற்சங்கங்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளன.

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஹோமாக அரச வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனையளிக்க அரசு முடிவுசெய்திருந்தமை கண்டித்து இன்று ஹோமாகமையில் வைத்தியசாலைக்கு முன்பு பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

எதிர்வரும் 5ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளது. இதற்கு அரசின் பிரதான ஐந்து தொழிற்சங்கங்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளன.

எதிர்ப்புத் தெரிவித்து

அரசு மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் விரைவில் உரிய தீர்மானம் எடுக்க வேண்டும் என்று இங்கு கருத்து வெளியிட்டிருந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உபத் தலைவர் ஹரித்த அளுத்கே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments