செங்கலடி-பதுளை நெடுஞ்சாலையில் கொடுவாமடு பகுதியில் விபத்து

0
26

.

செங்கலடி - பதுளை நெடுஞ்சாலையில்

மட்டக்களப்பு, செங்கலடி-பதுளை நெடுஞ்சாலையில் கொடுவாமடு பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தார்.

பிரம்புக் கூடை பின்னும் தொழில் புரியும் குறித்த நபர் காலை வேளை பிரம்ப வெட்டுவதற்காக சென்றபோது, கண்டியிலிருந்து பதுளை வீதியூடாக மட்டக்களப்புக்கு வந்து கொண்டிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான பட்டா ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மோதியதில் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக செங்கலடி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

செங்கலடி - பதுளை நெடுஞ்சாலையில்

மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து திருநாவுக்கரசு (வயது 42) என்பவரே விபத்தில் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com