சூரியின் உணவகத்தை திறந்த சிவகார்த்திகேயன்

0
1727

நகைச்சுவை நடிகர்களுள் தனக்கென தனி அடையாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் சூரி.

சூரி

இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என நடித்த படங்களின் காமெடிகள் ஹிட்டாகி விட்ட நிலையில் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர்.

சூரி தனது வருமானத்தில் தன் உறவினரின் குழந்தைகள் பல பேரை படிக்க வைத்துவருவதுடன், அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

சூரி

திரையுலகை பொறுத்த மட்டில் நடிகர்கள் சினிமாவில் இருக்கும் போதே தனியான தொழிலொன்றை ஆரம்பித்து விடுவார்கள்.

அந்த வகையில் நடிகர் சூரியும் உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

சூரி

மதுரை, காமராஜர் சாலையில் “அம்மன் ” என்ற பெயரில் உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்த உணவகத்தை சிவகார்த்திகேயன் திறந்து வைத்துள்ளதுடன், நடிகர் ஆர்.கே.சுரேஷும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

சூரி

ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருந்த சிவகார்த்திகேயன் நடிகர் சூரிக்காக மதுரை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூரி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com