சூதாட்ட நிறுவனத்துடன் தமக்கு தொடர்புள்ளதாக திலங்க சுமதிபால ஏற்றுக்கொண்டார்

0
50

திலங்க சுமதிபாலஇலங்கையின் சூதாட்டம் மற்றும் பந்தய நிறுவனமொன்றுடன் தமக்கு தொடர்புள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால ஏற்றுக்கொண்டதாக ”சிலோன் டுடே” பத்திரிக்கை இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக திலங்க சுமதிபால தாக்கல் செய்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டமை தொடர்பிலான வழக்கின் அறிக்கைக்கு அமைய, திலங்க சுமதிபால சூதாட்டம் மற்றும் பந்தய நிறுவனமொன்றுடன் தமக்கு தொடர்புள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளதாக சிலோன் டுடே பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கின் குறுக்கு விசாரணைகளின் போது திலங்க சுமதிபால இந்த விடயத்தை தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement