சு.கவின் மே தினக் கூட்டம் இம்முறை கண்டியில் அனைவருக்கும் அழைப்புவிடும் அமரவீர

0
58

சு.கவின் மே தினக் கூட்டம் இம்முறை கண்டியில் நடைபெறவுள்ளது என்று கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய மீன்வள அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

சு.கவின் மே தினக் கூட்டம்
மஹிந்த அமரவீர

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது. கண்டியில் நடைபெறவுள்ளது நீல நிறத்திலானக் கொடிகளையுடைய மேதினமாகும்.

கடந்த வருடம் காலியில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டம் வரலாற்றில் அதிக மக்கள் தொகை கலந்துகொண்ட மே தினமாக பதிவானது. இம்முறை இந்தச் சாதனையை முறியடித்து புதிய சாதனைப் படைப்போம்.

சு.கவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்தக் கூட்டத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் அனைவரும் கலந்துகொள்ளலாம் விருப்பமில்லாதவர்கள் வேறு கூட்டங்களிலும் கலந்துகொள்ளலாம். ஆனால், சு.க அனைத்து மக்களுக்கும் பொவான மேதினக் கூட்டத்தையே நடத்தவுள்ளது என்றார். ‘

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement