சுதந்திரக் கட்சி மீது சுமத்தப்பட்டிருந்த இனவாத முகத்திறை கிழித்தெறியப்பட்டுள்ளது

0
38

சுதந்திரக் கட்சி மீது சுமத்தப்பட்டிருந்த இனவாத முகத்திறை கிழித்தெறியப்பட்டுள்ளது இன்று மீள்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

கடந்த 2ஆம் திகதி கண்டி கெடம்பே மைததானத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டம் சு.கவுக்கு பாரிய வெற்றியளித்துள்ளது. வரலாறுகாண மக்கள் கலந்துகொண்டனர். குறித்த மேதினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நாங்கள் அனைத்து சு.கவினருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.

ஆனால், சிலர் காலிமுகத்திடலில் ஜி.எல். பீரிஸின் கட்சி நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய குழு ஆராய்ந்தப் பின்னர்தான் நடவடிக்கையெடுக்கப்படும். என்றாலும், அனைத்து சு.கவினரும் ஒன்றிணைந்து பயணிப்பதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புகின்றார்.

சுதந்திரக் கட்சி

நாங்களும் பலமுறை இரண்டு அணியினரும் ஒன்றிணைய பேச்சுகளை முன்னெடுத்தோம். ஆனால், அவை வெற்றியளிக்கவில்லை. 2020 சு.க தலைமையிலான அரசு கட்டாயம் அமையும். அதற்காகவே ஜனாதிபதியும் கட்சியை வலுப்படுத்தி வருகின்றார். அனைவரும் ஒன்றிணைந்தால் சாதாரண வெற்றி சிறந்த வெற்றியாக மாறும்.

இதேவேளை, இம்முறை நடைபெற்ற மேதினக் கூட்டத்துடன், சு.க. மீது சுமத்தப்பட்டிருந்த இனவாதக் கட்சி என்ற முகத்திறை கிழித்தெறியப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வடக்கில் இருந்து பாரிய மக்கள் கலந்துகொண்டனர்.

சு.கவை இனவாதம், மதவாதத்திற்கு அப்பால் நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களையும் இணைத்துக்குக் கொண்டு முன்நோக்கிப் பயணிக்கும் ஒரு ஜனநாயக கட்சியாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் அனைவரினதும் விருப்பம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments