சு.க மே தினக் கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் தொகை கலந்துகொள்ளவுள்ளனர் : எஸ்.பி.

0
36

சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் தொகை கலந்துகொள்ளவுள்ளனர் என்று சு.க. கூறியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் கண்டியில் இடம்பெறவுள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்ள சு.கவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் பஸில் ராஜபக்ஷ நடத்தும் கூட்டத்தில் சு.க. உறுப்பினர்களில் பெரும்பாளானர்கள் கலந்துகொள்ளதாக கூறுகின்றனர். காலி முகத்திடலுக்கு சு.கவினர் கலந்துகொள்ள போவதில்லை. இம்முறை கண்டியில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தை காணக் கூடியதான இருக்கும்.

சுதந்திரக் கட்சியின்

சு.கவின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரமுடியாதவர்கள் ஒருபோதும் பஸிலின் கூட்டத்துக்குச் செல்ல மாட்டார்கள். மேதினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments