சுதந்திரக் கட்சியின் பிரபலங்கள் சிலர் மஹிந்த அணிக்குத் தாவும் உத்தேசம்

0
26

சுதந்திரக் கட்சியின் ஒருசில அமைச்சர்களும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அரசிலிருந்து விலகி மஹிந்த அணியான பொது எதிரணியுடன் சேர்ந்துகொள்ளத் தீர்மானித்திருப்பதாக அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் அரசிலுள்ள பிரதி அமைச்சர் ஒருவரின் நுகேகொட இல்லத்தில் நடந்த இரகசிய சந்திப்பொன்றின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது எனவும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 12 பேரும் கடந்த பொதுத் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாங்கள் அரசிலிருந்து விலகப்போவதை ஜனாதிபதிக்கு முன்கூட்டியே தெரிவிக்கவுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கை இழந்து வருவதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com