சுதந்திரக்கட்சியின் ஆண்டு விழாவைப் புறக்கணிப்பவர்கள் மீது ஒழுக்காற்று

0
21

சுதந்திரக்கட்சியின் ஆண்டு விழாவைப் புறக்கணிப்பவர்கள் மீது ஒழுக்காற்று.

சுதந்திரக்கட்சியின்
சுதந்திரக்கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்  66ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கு சமுகமளிக்காதவர்கள் மீதான நடவடிக்கை பற்றி விழா முடிந்த பின்னர் முடிவெடுக்கப்படுமென அக்கட்சியின் பிரதம செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஆண்டுவிழா வைபவத்தில் கலந்துகொள்ளுமாறு கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கப் போகிறவர்கள், தொழிற்சங்கவாதிகள் உட்பட சகலருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களின்றி விழாவில் கலந்துகொள்ள தவறுபவர்களுக்கு எதிராக வைபவம் முடிந்த பின் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுயள்ளார்.