இந்திய கடற்படை தளபதி – பிரதமர் சந்திப்பு

0
26

இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் பயணமாக இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, நேற்று முன்தினம் கொழும்பு வந்தார்.

அவர் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக இலங்கையின் அரச மற்றும் பாதுகாப்பு தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தமே கொழும்புக்குப் பயணமாகியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement