சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களுக்கு நிவாரணம் : பிரதமர் ஆலோசனை

0
29

நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்கான நிவாரணம் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

அலரிமாளிகையில் நேற்று அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இத்திட்டத்துக்கான ஆலோசனையை வழங்கியுள்ளார்.

சீரற்ற காலநிலையால்

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காவோ அல்லது ஏனையத் தேவைகளுக்காகவே 2 பில்லியன் ரூபா கடன்தொகையை திறைசேரியில் இருந்து பெற்றுக்கொடுக்கவும் மத்திய வங்கியின் ஆளுநர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சௌபாக்கிய மற்றும் சுவசக்தி கடன்களுக்கே மேற்படி நிவாரணம் வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே கல்வி அமைச்சரான அகில விராஜ்காரியவசம் மேற்கண்டத் தகவலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments