சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் பணிப்பு

0
24

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதிலும் தற்போது சீரற்ற காலநிலையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

சீரற்ற

இந்த நிவாரணப் பணிகள் எவ்வித தடையும் இன்றி பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் என்றும் பிரதமர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com