சீனியின் இறக்குமதி வரி அதிகரிப்பு

0
23
சீனிக்கான சிறப்பு இறக்குமதி வரி இன்று முதல் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.
உலக சந்தையில் சீனியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், அதன் பயனை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும்  நோக்கில் இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை சீனிக்கு 23 ரூபாவும், சிவப்பு சீனிக்கு 25 ரூபாவும் இதுவரை வரியாக அறிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Advertisement