சீனாவில் கடும் நிலச்சரிவு: 100ற்கும் அதிகமானோரை காணவில்லை

0
21
சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் இருக்கும் மலைப்பகுதியில் உள்ள மண் மற்றும் பாறைகள் இன்று காலை திடீரென சரிந்து விழத் தொடங்கியது.
மலைச் சரிவில் உள்ள ஜின்மோ என்ற கிராமத்தில் இருக்கும் 40 வீடுகள் இந்த மண்சரிவில் புதைந்தன.
இந்த கிராமத்தில் சுமார் 100 பேர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
100-க்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்துள்ளதால் அவர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் சமீப காலமாக நிலச்சரிவு சம்பவங்கள் அதிகளவில் நிகழ்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் மத்திய ஹுபை மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.