சீனப் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது

0
66

சீனப் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது. நீரிழிவு நோய்க்காக பயன்படுத்தப்படும் குற்றிகளை நாட்டிலிருந்து கடத்திச் செல்ல முற்பட்ட சீன நாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 07 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 40 கிலோகிராம் நிறையுடைய குற்றிகளை இவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 4.15 மணியளவில் UL 838 என்ற விமானம் மூலம் சீனா நோக்கி செல்லவிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் ஒருவரிடம் 25,000 ரூபா தண்டப்பணம் அறவிட்ட பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் கூறியுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments