சிம்புவை கலாய்த்த ரசிகருக்கு பதிலளித்த பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ்

0
169

சிம்புவின் படங்கள் வெளியாவதற்கு நேரம் ஆனாலும் அவரது ரசிகர்கள் கூட்டம் மட்டும் எப்போதுமே குறையாது. சிம்புவின் AAA படத்துக்கு மாஸ் வரவேற்பு கொடுக்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று இளையராஜா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. அப்பாடலை பிரேமம் புகழ் இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ஒரு ரசிகர், இந்த பாடல் கண்டிப்பாக பிளாப் தான், இதில் நீங்க வேறு சிம்புவின் ரசிகர். இதுபோன்ற தேவையில்லாததை பிரபலபடுத்தாதீர்கள் என்று கூறினார்.

இதனை பார்த்த ஆல்போன்ஸ் புத்திரன், எனக்கோ என்னுடைய பேஸ்புக் பக்கத்திற்கோ நீங்கள் உரிமையாளர் இல்லை. அதேபோல் நான் என்ன பதிவு செய்ய வேண்டும் என்பதை கூற உங்களுக்கு உரிமை இல்லை. என்னுடைய பக்கத்தில் இதுபோன்ற பதிவு செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.சிம்புவை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com