சினிமாவுக்கு ஒய்வு தந்த ரிச்சா

0
156

‘மயக்கம் என்ன’ ‘ஒஸ்தி’ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய்.

ரிச்சா

இவர் தமிழில் சினிமாவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால் காதல் விவகாரங்களில் சிக்கியதால் அந்த எதிர்பார்ப்பு இல்லாமல் போனது.

ரிச்சா

2011ம் ஆண்டு அவர் நடிப்பில் உருவான தமிழ் படங்களும் திரைக்கு வந்த நிலையில், கடந்த 5 வருடத்துக்கும் மேலாக தமிழ் படம் எதிலும் அவர் நடிக்கவில்லை, ஒன்றிரண்டு தெலுங்கு படங்களில் மட்டும் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கிவிட்டதாகவும், வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றிருப்பதாக கூறப்பட்டது.

ரிச்சா

இருப்பினும் டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார் ரிச்சா.

அவரது ரசிகர்கள் மீண்டும் நீங்கள் நடிக்க வருவது எப்போது என்று கேட்க, அதற்கு பதில் அளித்துள்ள ரிச்சா, நடிப்பிலிருந்து விலகி விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com