சிங்கப்பூரில் சதித்திட்டம் : விசாரணை கோரும் மஹிந்த

0
35

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்குச் சொந்தமான, சிங்கப்பூரில் உள்ள வீட்டில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் சிங்கப்பூரில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கல்லையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

சிங்கப்பூரில் பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக பலர் கூறுகிறார்கள். அது இரகசியமான ஒன்றல்ல. ஜனாதிபதித் தேர்தலின் போது அமைச்சர்கள் சிலர் ஏன் சிங்கப்பூருக்கு சென்றார்கள்? அவர்கள் அங்கு சென்று திரும்பும் போது கொண்டு வந்த பொதிகளில் என்ன இருந்தது என பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்துவதால் இன்று நாட்டு மக்களுக்கு சிற்சில விடயங்கள் தெரியவருகின்றன. அதே போல சிங்கப்பூரில் இடம்பெற்ற சதித்திட்டம் தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement