சார்லிக்கு மரியாதை செலுத்தும் நிக்கி

0
92

சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா ஷர்தா நடிக்கின்றனர்.

நிக்கி கல்ரானி

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் டி.சிவா கூறியதாவது, “2002ல் தமிழில் வெளியான சார்லி சாப்ளின் படம், பிறகு ஹிந்திதியில் சல்மான்கான் நடிப்பில் “நோ என்ட்ரி”, தெலுங்கில் பெல்லம் ஊர் எல்தே, மலையாளத்தில் ஜெயராம், பாவனா நடிப்பில் ஹேப்பி ஹஸ்பென்ட்ஸ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் நடிப்பில் ஹல்லா புல்லா சுல்லா மற்றும் போஜ்புரி, ஒரியா, மராத்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.”

பிரபுதேவாவுடன்

இப்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. படத்தில் பிரபுதேவாவுக்கும், நிக்கி கல்ராணிக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக இருவரது குடும்பமும் திருப்பதிக்குச் செல்லும்போதும், அங்கு போய்ச் சேர்ந்த பிறகும் நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே படமாக உருவாகிறது.

திருப்பதிக்குப் போனால் திருப்பம் உண்டாகும் என்று சொல்வார்கள். அது என்ன திருப்பம் என்பது சஸ்பென்ஸ். இந்த ஆண்டு உலக காமெடி மேதை சார்லி சாப்ளினின் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் படம் தயாராவது, அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக இருக்கும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com