சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா? ரியல் மாட்ரிட்

0
43

37வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி 28 வெற்றி, 6 டிரா, 3 தோல்வியுடன் 90 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஸ்பெயினில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கு இடையிலான புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் அணி, செல்டா டி விகோ அணியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அணி ரியல் மாட்ரிட் அணி 41 என்ற கோல் கணக்கில் செல்டா டி விகோ அணியை தோற்கடித்தது.

ரியல் மாட்ரிட் அணி தரப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 10வது மற்றும் 48வது நிமிடத்திலும், கரிம் பென்ஜிமா %0வது நிமிடத்திலும், டோனி குரூஸ் 88வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். செல்டா டி விகோ அணி தரப்பில் ஜான் குய்டெட்டி 69வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். 37வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி 28 வெற்றி, 6 டிரா, 3 தோல்வியுடன் 90 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

சாம்பியன்

நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 37 ஆட்டத்தில் விளையாடி 27  வெற்றி, 6 டிரா, 4 தோல்வியுடன் 87 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. வருகிற 21ஆம் திகதி நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி மாலகா அணியை சந்திக்கிறது. இதில் ரியல் மாட்ரிட் அணி டிரா செய்தாலே 33வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று விடும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement