சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதாரம் வளர்ச்சி

0
24

சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரம் பாராட்டத்தக்க முன்னேற்றத்தைப் பதிவுசெய்திருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாபாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கை தொடர்பான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை. சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை சரியான முறையில் முன்னெடுக்கும் சவாலை நிதியமைச்சராகப் பணியாற்றிய ரவி கருணாநாயக்க வெற்றிகொண்டார்.

ரவி கருணாநாயக்க உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுக்காக பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனை முன்மாதிரியாகக் கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினரின் பெரும்பாண்மையான உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்வது அவசியமாகும்.

ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டமையால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனை சீர்செய்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் நடைமுறைப்படுத்த நல்லாட்சி அரசால் முடிந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பாரிய அளவிலான கடன் பெற்றுக்கொள்ளப்பட்டமையால் நாட்டின் பொருளாதாரம் கடனில் தள்ளப்பட்டது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement