சர்வதேச விசாரணைக்கே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது

0
67

பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கைக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது மிகவும் ஆபத்தான விடயம் என்பதுடன், இது இறுதியில் சர்வதேச விசாரணையில் வந்து முடியும் என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்தார்.

ஐ.நா. மனிவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானம் நேற்று வாக்கெடுப்பின்றி நிறைவேறியமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளாõர்.
இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையில் நிராகரிக்கபட்ட அனைத்தையும் இரண்டாம் கட்டத்தில் நிறைவற்றவும் புலிகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவுமே தற்போது பொறுப்புக் கூறல் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தயான் ஜெயதிலக
தயான் ஜெயதிலக

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலையிட்டு இந்த நகர்வை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த பயணம் சர்வதேச விசாரணையில் வந்து முடியும்.

இலங்கைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவா பிரேரணையை நிறைவேற்றுவதற்கான இரண்டு வருட கால அவகாசம் வழங்கியிருப்பதன் மூலம் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்த்த, நிராகரித்த விசயங்களை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

நாட்டுக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வதேச தரப்பு கொண்டுவந்த பிரேரணையை முன்னைய அரசாங்கம் எதிர்த்த நிலையில் இந்த அரசாங்கம் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பிரேரணைக்கு மீள் இணக்கம் தெரிவித்து முழுமையாக நிறைவேற்ற அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரபாகரனை காப்பாற்ற முயற்சி செய்ய நபர்களே இன்று ஜெனிவா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர். இதில் புலிகளை நியாயப்படுத்திய நபர்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இறுதி யுத்தத்தில் பிரபாகரனை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்த நபர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நிறைவேற்றவே அரசாங்கம் முயட்சிகின்றது.

ஆகவே தமிழர் தரப்பும் புலம்பெயர் அமைப்புகளும் புலிகளின் பிரதிநிதிகளும் எதை எதிர்பார்த்து செயற்படுகின்றனரோ அதை அடையும் பாதையை அரசாங்கம் தனது இணக்கத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com